சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
X

பைல் படம்.

POCSO Act in Tamil -9 வயது சிறுமியை பாலியல் வன்கொடைமை செய்ய இயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

POCSO Act in Tamil -வந்தவாசி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவண்ணாமலை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

வந்தவாசி வட்டம், வல்லம் கிராமத்தைச் சோந்தவா் நவீன்குமாா் வயது 31 . இவா், 2014 நவம்பா் 10-ஆம் தேதி 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாராம். இதுகுறித்து, வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து நவீன்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட நவீன்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து, நவீன்குமாரை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கிரிவலப் பாதையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது

திருவண்ணாமலை கிரிவலப்பாதை புறவழிச்சாலை ரிங் ரோடு பகுதியில் சமீபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், மர்ம குபம்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். இதேபோல், புறநகர் பகுதிகளிலும் பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில், தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையிலும், வழிப்பறி நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வழிப்பறியில் ஈடுபட்டது, சென்னை, மதனந்தபுரம், மாதா நகரைச் சேர்ந்த செல்வமணி, 21, மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட, திருவண்ணாமலையைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உட்பட ஐந்து பேர் என, தெரிந்தது.

தொடர்ந்து, தனிப்படை போலீசார் செல்வமணி உள்ளிட்ட 5 பேரையும் பிடித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை பே கோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் வயது 38 . இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அதேபோல் கீழ்பென்னாத்தூர் தாலுகா வழுதலங்குணம் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவரையும் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!