அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 40 பேர் காயம்
நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பஸ்கள்.
Road Accident News -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமம் அருகே சென்னையில் இருந்து வந்தவாசி வழியாக அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. இதேபோன்று வேலூரில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ்கொடுங்காலூர் கிராமம் அருகே இரண்டு அரசு பேருந்துகளும் எதிர்பாராமல் நேருக்கு நேர் அதிபயங்கர சத்துடன் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த இரண்டு அரசு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் சுமார் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து மோதிக்கொள்ளும் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்து பேருந்தில் மாட்டிக்கொண்ட பயணிகளை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் கீழ்கொடுங்க நல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விபத்து நடைப்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பயணிகளுக்கு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .
இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் வந்தவாசி அரசு மருத்துவமனைக்குச் நேரில் சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து பயணிகளுக்கு ஆறுதலை தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu