மாணவிகளிடம்100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவிகளிடம்100%  வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
வந்தவாசி தனியார் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளிடம் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும்மான சந்தீப் நந்தூரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் குழுக்கள் வரைந்திருந்த விழிப்புணர்வு வண்ண கோலத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்,100௦ % வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு இயக்கத்தில் கைவிரல் பதிவு மற்றும் கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

"இளம் வாக்காளர் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் வாக்குகளை யாரும் விற்க கூடாது" என்றும், 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் ஜனநாயக கடமை குறித்தும் முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) மூலம் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் செயல்விளக்கம் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் திருமதி.பெ.சந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதாலட்சுமி, மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்,கல்லூரியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!