வந்தவாசி அருகே அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வந்தவாசி  அருகே அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
X

மாணவிக்கு பரிசு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சென்னை பன்னாட்டு மொழி ஆய்வு மைய இயக்குனர் முருகானந்தம்

வந்தவாசி அருகே உள்ள மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது

வந்தவாசியை அடுத்த மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், சித்திரைத் திருவிழா, அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு விழா, கலை, பண்பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஆ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். சேத்துப்பட்டு செந்தமிழ்த்தோ அமைப்பின் செயலா் ஜெய்சங்கா் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் இரா.பத்மநாபன் வரவேற்றாா்.

சென்னை பன்னாட்டு மொழியாய்வுமைய இயக்குநா் பேராசிரியா் க.முருகானந்தம் சிறப்புரையாற்றினாா். மேலும், கலை, பண்பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அவா் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்றவா்களை சென்னைப் பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளா் வி.பத்மபிரியா பாராட்டிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil