மது போதை பொருள்களிடமிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மது போதை பொருள்களிடமிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
X

பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

இளைஞர்களை மது இல்லாமல் வாழவே முடியாது என்ற சூழலை திராவிட கட்சிகள் உருவாக்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் சென்னை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வெள்ள பெருக்குகளை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நீர் மேலாண்மை திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திருவண்ணாமலை வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து மேலும் அவர் கூறியதாவது:

''நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.தொழில்வளம், வேலை வாய்ப்பு இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. இங்கொரு சிப்காட் அமைக்கலாம். அதற்காக, விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது. ஒன்றை அழித்து இன்னொன்றைக் கொண்டு வருவதையும் ஏற்க முடியாது. தரிசு நிலங்களில் சிப்காட் கொண்டு வரலாம். 8 வழிச்சாலை திட்டமும் இதே போன்றுதான். சென்னை - சேலத்துக்கு ஏற்கெனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. 4-வது தேசிய நெடுஞ்சாலை தேவையில்லாதது.

பூஜை காலம் வருவதால், ஆம்னி பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுபற்றி அமைச்சரிடம் கேட்டால், 'ஆம்னி பேருந்து, பணக்காரர்கள் செல்வது; அரசுப் பேருந்துகள் ஏழைகள் செல்வது' என புரியாத கருத்தொன்றைச் சொல்கிறார்.எங்களுடைய நீண்டநாள் கோரிக்கையை ஏற்று வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களைப் பிரித்ததைப்போன்றே பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டங்களான திருவண்ணாமலை, திருவள்ளூரையும் 2-ஆகப் பிரிக்க வேண்டும். வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழக அரசு அது தொடர்பாக அறிவிக்க வேண்டும்.

மின்கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும். மாதம் மாதம் மின்கட்டண கணக்கெடுப்பினை தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டும். இது தேர்தல் அறிக்கையில் தமிழக அரசு வாக்குறுதியாக அளித்துள்ளது.ஆன்லைன் ரம்மி தடை செய்யும் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரிக்கிறோம். இதற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். கடந்த காலங்களில் 80 நபர்களும், இந்தாண்டில் மட்டும் 28 நபர்களும் ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

நந்தன் கால்வாய்யுடன் தென்பெண்ணையாற்றை இணைக்க வேண்டும். இதனால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயனடைவார்கள். இந்த ஆண்டு மட்டும் தென்பெண்ணையாற்றில் 20 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. ஆகவே, நந்தன் கால்வாயை, தென்பெண்ணையாற்றுடன் இணைக்கும் திட்டத்தினை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அமைதியைக் சீர்குலைகின்ற வகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. இந்தச் செயல் வட இந்திய கலாசாரம். இப்படிச் செய்வதால், உங்களுக்குத்தான் ஆபத்து. மது, போதைப் பொருள்களிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த தலைமுறையை காப்பாற்ற முடியாது; அடுத்த தலைமுறையினரையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பா.ம.க போராடிக் கொண்டிருக்கிறது. 'இளைஞர்களை, மது இல்லாமல் வாழவே முடியாது என்றச் சூழலை உருவாக்கியிருக்கிறது திராவிட மாடல். இரண்டு திராவிடக் கட்சிகளும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுதான்'' என்றார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!