திருவண்ணாமலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிலரங்கம்

அங்கன்வாடி பணியாளர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியா்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் பச்சினம் குழந்தைகளுக்கு சத்தான உணவு ஊட்டுதல் முக்கியத்துவம் குறித்து பாலுட்டும் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
பொதுவாக குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக காணப்படுகிறார்கள். எந்தெந்த உணவுப் பொருட்களில் என்னென்ன சத்துக்கள் காணப்படுகிறது என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். காய்கறிகளை பச்சையாக உண்ண வேண்டும் . பழங்களை திரவமாக எடுத்துக் கொள்ளாமல் பழமாகவே சாப்பிடுவது நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
நம்மைப் போன்ற நாடுகளில் வாழ்கிறவர்களுக்குதான் சுகாதாரமான உணவு சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் கிடைக்கிறது. சிறுதானியம் போன்ற பாராம்பரிய உணவு பொருட்களை உண்னா வேண்டும். அரிசி வகைகளில்கைகுத்தல் அரிசி, இரட்டை வேகவைத்த அரிசி போன்றவை நமது உடல்நலத்திற்கு நல்லது. குழந்தைகளுக்கு சாக்லெட், கார்பனேட் குளிர்பானங்கள், பாட்டில்களில் உள்ள குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி கொடுக்ககூடாது. இது குறித்து கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
மேலும், குழந்தை திருமணங்கள் குறித்து நன்கு கண்காணியுங்கள். குழந்தை திருமணங்கள் குறித்து தகவல்களைதெரிவிக்கலாம். நீங்கள் அளிக்கிற தகவல்கள் இரகசியம் காக்கப்படும். மேலும் குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் திருமணத்தை நடத்தியவர்க ள் , திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் என அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் போதைப்பொருட்கள் குறித்து பயன்பாடுகள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.
நமது மாவட்டத்தில், 100 அங்கன்வாடி மையங்களுக்கு மேல் கட்டுவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 100 முதல் 150 புதிய மையம் கட்டுவதற்கு ஆணை வெளியிடப்படும். மையங்களில் தண்ணீர் சம்பந்தமான பிரச்சனைகள் 90 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளது. கழிவறை வசதிகளை மேம்படுத்தவும், புதியதாக அங்கன்வாடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகளை கட்டவும், சுவர் ஓவியங்கள் சுவர்களில் வரைவுவதற்கும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு எழுத்துக்களையும், கை கழுவும் முறைகள், தன் சுத்தம் குறித்தும், ஆடை அணிதல் குறித்தும், உணவு உண்ணும் முறைகள் குறித்தும் கற்றுக்கொடுக்கவும் , மரங்களை நடவும், கல்வி மற்றும் விழிப்புணர்வினை கிராமப்புறங்களில் அதிக அளவில் ஏற்படுத்தவும், அதன்மூலமாக பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி ஆட்சியர் பேசினார் .
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்து கல்லூரி மரு. ஹரிஹரன், மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா, மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu