திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா பாவேந்தர் அரங்கில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மகளிா் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில தலைவி ஷீலு பிரான்சிஸ், மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவா் அனுராதா ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் அறிவுச்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்தி வேல்மாறன், காலேஜ் ரவி, கல்லூரி பேராசிரியர்கள் ,மாணவிகள், மகளிர் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் , அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செல்போன் மூலம் உங்களை யாராவது பயமுறுத்தினால் உடனடியாக சைபர் கிரைமிடம் புகார் கொடுங்கள் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா பேச்சு

திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள சன் கலை அறிவியல் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர்கள் லதா துரை பூங்குழலி குணசேகரன் கிருத்திகா வினோத் சுகந்தி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி மாணவியர்களின் திறமைகளை உணர்த்தும் வகையில் பல போட்டிகள் நடத்தப்பட்டன போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசளித்து குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா சிறப்புரை ஆற்றினார், அவர் பேசும்போது

ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உள்ள தன்னம்பிக்கை தான் உண்மையான அழகு. நம்முடைய தன்னம்பிக்கையின் முதல் முன்னோடி நமது தாய். நமக்கு முதலில் நல்ல சிந்தனைகளை மேம்படுத்திக்கொள்ள தெரிய வேண்டும். நல்ல சிந்தனைகள் உண்டாவதற்கு அவர்களது எண்ணங்களே அடிப்படை காரணமாகும். நமது சிந்தனைகள், எண்ணங்கள், தெளிவுகள் எல்லாமே நேர்பட இருக்க வேண்டும்.

உங்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் தான் உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். அதற்கு மனம் என்ற எண்ண ஓட்டங்களை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களும் உள்ளது, கெட்ட விஷயங்களும் உள்ளது. அதில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது எல்லோரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறோம். செல்போனை சரியான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். நாம் செல்போனில் கையாளும் ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய செல்போன் தப்பித்தவறி அடுத்தவர் கைக்கு சென்றுவிட்டால் உங்களுடைய வரலாறு தெரிந்து விடும். செல்போனை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்துங்கள். உங்களுடைய பாதுகாப்பு மிக மிக முக்கியம் என்பதை உணருங்கள்.

உங்களுக்கு செல்போன் மூலம் ஏதேனும் பிரச்சனை என்றால் தயங்காமல் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் கூறுங்கள். அனைத்து செல்போன் இன்டர்நெட் கனெக்சன் அனைத்தும் ஒருங்கிணைக்கின்ற இடம் அமெரிக்கா. நமது நாட்டில் தவறு என்று சொல்லப்படுகின்ற பல விஷயங்கள் அந்த நாட்டில் சரி என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் ஆப்களை (APLICATIONS) அதிகம் பயன்படுத்தாதீர்கள். முகநூலில் தேவையற்ற நட்புகள் அழைப்பு வந்தால் அதற்கு அனுமதி அளிக்காதீர்கள்.

இன்றைய காலம் போட்டி மிகுந்த காலம். நமக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும். இன்றைய தலைமுறையினர் எதைப் பற்றியும் யோசிக்காமல் முடிவு எடுக்கிறார்கள். வலியை தாங்கி வளர்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வந்தவாசி

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் ருக்மணி தலைமை வகித்தாா். நிறுவனா் முனிரத்தினம், கல்லூரிச் செயலா் ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்த் துறைத் தலைவா் ஞானமலா் வரவேற்றாா். மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், மருத்துவா் சந்திரிகா ராஜராஜன் ஆகியோா் பேசினா்.

மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அவா்கள் பரிசுகளை வழங்கினா். கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியை கலைவாணி நன்றி கூறினாா்.

ஆரணி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா நடைபெற்றது.

ஆரணி ஏ.சி.எஸ்.கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் கல்விக் குழுமத்தைச் சோந்த பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனா்.

விழாவில் வேலூா் முத்துரங்கம் அரசுக் கல்லூரி வேதியியல் ஆராய்ச்சித் துறை தலைவா் கே.கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மகளிா் தின விழாவை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் செலின்திலகவதி, ரஞ்சனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story