திருவண்ணாமலையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலையில் நாளை  கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெறும் இடங்கள்
X

தடுப்பூசி முகாமில் கலெக்டர் முருகேஷ் (கோப்புப்படம்)

திருவண்ணாமலை மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருவண்ணாமலை மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில், இதுவரை தடுப்பூசி போடாதவர்களும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாட்கள் நிறைவு பெற்றவர்களும் நாளை நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். தடுப்பூசி போடுவோர் தங்களது ஆதார் அடையாள அட்டையை உடன் எடுத்து செல்ல வேண்டும்.

தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

ஆரம்ப சுகாதார நிலையம் முத்து விநாயகர் கோவில் பேருந்து நிலையம் அருகில்,

புதுத்தெரு முஸ்லிம் பள்ளி,

குழந்தைகள் நல மையம் பே கோபுரம் அருகில்,

ரயில் நிலையம் , உழவர் சந்தை ,

ஆரம்ப சுகாதார நிலையம் காந்திநகர்,

நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேரடி தெரு,

நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர் ,

நகராட்சி தொடக்கப்பள்ளி தேனிமலை,

அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம்,

முஸ்லிம் நிதி உதவி தொடக்கப்பள்ளி கோரிமேடு தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்கிற நிலையை அடைய உதவிடுமாறும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!