மூத்த குடிமக்கள் தபால் வாக்கு பதிவு பெற்று வர வாகனங்கள் தயார்

மூத்த குடிமக்கள் தபால் வாக்கு பதிவு பெற்று வர வாகனங்கள் தயார்
X

மூத்த குடிமக்கள் தபால் வாக்கு பதிவு பெற்று வர வாகனங்களை அனுப்பி வைத்த மாவட்ட கலெக்டர்

மூத்த குடிமக்கள் தபால் வாக்கு பதிவு பெற்று வர வாகனங்களை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு பெற்று வர செல்லும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அஞ்சல் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

இப்பணி திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இப்பணிகளை துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் ஏப்ரல் 5 ம் தேதி முதல் ஏப்ரல் 9 ம் தேதி வரை நான்கு நாட்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அஞ்சல் வாக்கு சீட்டு பெறும் பணியை மேற்கொள்ளும்.

இப்பணியில் வாக்குப்பதிவு அலுவலர் வாக்குப்பதிவு உதவி அலுவலர் நுண் பார்வையாளர் காவல்துறையினர் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் அடங்குவர் இப்பணியை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் நேரடியாக பார்வையிடலாம் வாக்காளர் குறித்த இடத்தில் இல்லை எனில் மற்றொரு முறை வாய்ப்பளிக்கப்படும்.

ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 45 வரை அஞ்சல் வாக்குகள் பெரும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி குறித்து வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அப்பகுதியில் உள்ள விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அனைவரும் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி நிறைவடையும் வரை மேற்கொள்ளப்படும். இச்செய்தலில் வாக்குப்பதிவின் ரகசியம் காக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர் குமார், திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் கட்சி முகவர்கள், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவதாஸ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முகிலன், திருவண்ணாமலை வட்டாட்சியர் தியாகராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil