/* */

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
X

திருவண்ணாமலையில் இருளில் கிரிவலம் வந்த பக்தர்கள்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“மலையே மகேசன்” என போற்றப்படும் திருவண்ணா மலையில் உள்ள அண்ணா மலையை 14 கி.மீ., தொலைவுக்கு பவுர்ணமி நாளில் வலம் வந்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்., கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாட்களுமே உகந்த தினம் என்றாலும் பவுர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிக சிறப்பு உண்டு என்று கூறுவார்கள் அதாவது ஊழ்வினை நீக்கும் என்ற பெருமையும் பவுர்ணமி கிரிவலத்திற்கு உண்டு.

அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி, கிரிவலம் செல்ல உகந்த நேரம் 2-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11.16 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.11 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது..

இருளில் கிரிவலப் பாதை

பவுர்ணமி தினம் மட்டுமின்றி தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருகின்றனர்.

தற்போது கோடை வெயில் அதிகம் இருப்பதால் மாலை நேரங்களிலும் இரவிலும் அதிக அளவில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

கிரிவலம் செல்லும் பாதையில் அனைத்து இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சில தினங்களாக மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. பாதி இடங்களுக்கு மேல் மின்விளக்குகள் எரியாததால் அப்பகுதி முழுவதும் இருட்டு சூழ்ந்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக நித்தியானந்தர் ஆசிரமம் முதல் கௌதம மகரிஷி ஆசிரமம் வரை விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் பக்தர்கள் தங்களது செல்போனில் உள்ள டார்ச்சை ஒளிரச் செய்தபடி கிரிவலம் மேற்கொள்கின்றனர், தங்களது குழந்தைகளை கையைப் பிடித்தபடி பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்.

கிரிவலப் பாதையில் பவுர்ணமி தினம் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் மின்விளக்குகள் மாலை இரவு வேலைகளில் தொடர்ந்து எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் கிரிவலப் பாதையில் விளக்குகளை பராமரிக்க கூடுதல் ஊழியர்களை நியமித்து மின்விளக்குகளை எரிய செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாதந்தோறும் உண்டியல் மூலம் ரூபாய் 2.25 கோடியை பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெரும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் கூறினர்.

Updated On: 1 Jun 2023 1:08 AM GMT

Related News