திருவண்ணாமலை தீப திருவிழாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை: ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை: ஆட்சியர் அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ்.

தீப திருவிழாவில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை: தீப திருவிழாவில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீப திருவிழாவின்போது, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் விதிமுறைகளை, வணிகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். உணவு பொருட்களில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் விற்கக் கூடாது. டீ கடைகளில் தரமான டீ மற்றும் காபி தூளை பயன்படுத்த வேண்டும். உணவு பொருட்களில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது.

உணவு பாதுகாப்பு துறை பதிவுச்சான்று, உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். உணவு சமைக்குமிடம், சுத்தமாக, சுகாதாரமானதாக பராமரிக்க வேண்டும். தூய்மையான குடிநீர் பயன்படுத்த வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குடிநீர் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. நிக்கல் பூசிய செம்பு பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. உணவு பண்டங்களை அச்சடித்த தாள்களில் வைத்து வினியோகிக்கக்கூடாது. பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!