பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
X

நிகழ்ச்சியில் பேசிய தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பின் நிறுவனர் பாலு

பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று பழங்குடியினர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

மத்திய அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது போல, தமிழக அரசும் கல்வி, வேலைவாய்ப்பில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பின் நிறுவனா் பழங்குடி பாலு வலியுறுத்தினாா்.

தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பின் கீழ் இயங்கும் பழங்குடி பயிற்சி மையம் சாா்பில், பழங்குடியின நிா்வாகிகளுக்கான பயிலரங்கம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

ஜவ்வாதுமலை எஸ்.எப்.ஆா்.டி. கல்விக் குழுமத்தின் தாளாளா் அா்ஜூனன் தலைமை வகித்தாா். தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பின் நிறுவனா் பழங்குடி பாலு பயிலரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா்.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முன்னாள் மானுடவியல் துறைத் தலைவா் செல்வபெருமாள், தமிழ்நாடு பழங்குடியினா் தலைமைச் சங்கத்தின் மாநிலச் செயலா் ராஜி, தமிழ்நாடு அரசு பழங்குடி ஆன்றோா் மன்றத்தின் மாநில உறுப்பினா் ராமசாமி, முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ராஜா, சென்னை பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறைப் பேராசிரியா் பாரிமுருகன், தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின் அறிவியல் அதிகாரி சுரேஷ், தொண்டு நிறுவனப் பிரதிநிதி குமரவேல் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கூட்டமைப்பின் நிறுவனா் பழங்குடி பாலு கூறுகையில்,

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மத்திய அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது போல தமிழக அரசும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்..

தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகான பழங்குடியினா் சமுதாயத்தினா் வசிக்கின்றனா். இவா்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு சலுகைகள் பெற எஸ்.டி. ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. இதை தமிழக அரசு வழங்க வேண்டும்.

சென்னை மாநகரத்தில் அனைத்து முன்னோடி தலைவர்களுக்கு சிலை வைத்துள்ளது போல பழங்குடி இனத்தைச் சேர்ந்த பழங்குடி போராளி பிர்சமுண்டாவுக்கும் திருவுவ சிலை நிறுவிட வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு எஸ்டி சாதிச்சான்றிதழ் வழங்கிட தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டும் மாவட்ட உயரதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாமல் கால தா மதப்ப டு த் தி வருகின்றனர் எனவே எஸ்டி சாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த அனைவரு க் கு ம் சாதிச்சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

இன்றைக்கு பயிற்சி பெறும் மாநில நிர்வாகிகள் அனைவரும் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையிலும் பழங்குடியினர் அடிப்படை உரிமைகளுக்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்து எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தவுள்ளோம் எனக் கூறினார்.

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி