திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி!
திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணி
திமுக இளைஞரணி சார்பில் நீட் விலக்கு குறித்து வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதயொட்டி கன்னியாகுமரியில் இருந்து மாநில அளவிலான இருசக்கர வாகன பேரணி கடந்த 15ஆம் தேதி திமுக இளைஞரணி தலைவரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பேரணி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து இரு சக்கர வாகன பிரச்சார பேரணி ஆரணி வந்தடைந்தது. ஆரணியில் நேற்று தொடங்கிய இருசக்கர வாகன பிரச்சார பேரணி போளூர். கலசப்பாக்கம். செங்கம் வழியாக நேற்று இரவு திருவண்ணாமலை வந்தடைந்தது.
திருவண்ணாமலை நகரில் முக்கிய வீதிகள் வழியாக கலைஞர் சிலை, பெரியார் சிலை வழியாக ,வருகை தந்த இரு சக்கர வாகன பேரணி திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலை வந்து அடைந்தது .
பேரணியாக திருவண்ணாமலைக்கு வருகை தந்தவர்களை மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி ஆகியோர் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து கலைஞர் திடலில் நடைபெற்ற பிரச்சார விழிப்புணர்வு கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்
தமிழ்நாடு முதல்வர் ஒரு கண்ணில் ஆட்சியையும் ஒரு கண்ணில் கழகத்தையும் கட்டி காத்து இரு கண்களாக தமிழகத்தையும் கழகத்தையும் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் பணியாக இருந்தாலும், கழகப் பணியாக இருந்தாலும் அவை இரண்டுமே தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர்,
கழகத்தை அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த தலைமுறையின் தலைவராகவும் இளைஞர்களின் தலைவராகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழகமே பாராட்டும் அளவிற்கு விளையாட்டுத் துறை அமைச்சரின் பணி உள்ளது தாய் கழகத்திற்கு உதவியாக இளைஞர் அணி செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி கம்பன் பேசினார்.
இதனை தொடர்ந்து கலைஞரின் பேணா என்ற தலைப்பில் மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் நேரு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி நகர அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu