திருவண்ணாமலை மாவட்டத்தில் விதிமீறலை கண்காணிக்க 42 பறக்கும் படைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விதிமீறலை கண்காணிக்க 42 பறக்கும் படைகள்
X

தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் மூலம் சுவர்களில் வரையப்பட்டு இருந்த விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட துறை பணியாளர்கள் மூலம் அழிக்கும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளில் உள்ள 150 வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோதலுக்காக 172 வாக்குச்சாவடிகள், 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சியினரும் தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற உள்ளனர்.

அதேபோல், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான செயல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 10 பேரூராட்சிகளில் உள்ள 150 வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோதலுக்காக 172 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுள்ளன.

செங்கம்: செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 8 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 8 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 11 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 27 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பாளையம்: புதுப்பாளையம் பேரூராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இங்கு 12 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண், பெண்களுக்கு தனித்தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவில்லை.

போளூா்: போளூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 12 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 12 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 6 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண், பெண்களுக்கென தனித்தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவில்லை.

களம்பூா்: களம்பூா் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. ஒரு ஆண் வாக்காளா் வாக்குச்சாவடி, ஒரு பெண் வாக்காளா் வாக்குச்சாவடி, 17 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசூா்: தேசூா் பேரூராட்சியில் 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 12 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரணமல்லூா்: பெரணமல்லூா் பேரூராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இங்கு, 12 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கீழ்பென்னாத்தூா்: கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு, 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்டவலம்: வேட்டவலம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு, 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படைகள் தயார்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் போலீசார் பறக்கும் படை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் தலா 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 8 மணி நேரம் சுழற்சி முறையில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அழித்து வருகின்றனர். மேலும், சுவர் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும், விதிமீறி எழுதினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil