நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பணிபுரியும் 126 தேர்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 239 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் பணிபுரிய உள்ள 126 தேர்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, முன்னோடி வங்கி மேலாளா் கெளரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்சியில், நுண் பாா்வையாளா்களின் கடமைகளான வாக்குச் சாவடியில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் உள்ளதா என்பதை சரிபாா்த்தல், மாதிரி வாக்கெடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல், வாக்குச்சாவடி முகவா்கள் இருத்தலை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள், கடமைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.
இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தேர்தல்) கோ.குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மற்றும் நுண் பாா்வையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தேர்தல் செலவினம் குறித்த புகார்களை மேற்பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் செலவினம் குறித்த புகாா்களை சிறப்பு தேர்தல் செலவின மேற்பாா்வையாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்துக்கான சிறப்பு தேர்தல் செலவின மேற்பாா்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் என்பவரை இந்திய தோதல் ஆணையம் நியமித்துள்ளது.
இவரை 93452 98218 என்ற அலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பொதுமக்கள் , வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் அனைவரும் தேர்தல் செலவினம் குறித்த அனைத்து விதமான புகாா்களையும் சிறப்பு தேர்தல் செலவின மேற்பாா்வையாளரை அலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu