மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
தேர்தல் - கோப்புப்படம்
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மக்களவைத் தேர்தல் பணிகள் மேற்கொள்வது தொடா்பான மண்டல அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தேர்தல்) குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டல அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இவா்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசியதாவது:
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பாரபட்சம் பாராமல் தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிக்கும் வரை சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
நல திட்ட உதவிகள்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை சாா்பில் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட கலைத் திருவிழா கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் போன்றவற்றில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, முன்னோடி வங்கி மேலாளா் கெளரி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர், சமூக நலத்துறை அலுவலர் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu