திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம்
X

திருவண்ணாமலை பேருந்து நிலையம்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பை தடுக்க திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்வதில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் உள்ளது. அனைத்து பஸ்களும் ஓரே நுழைவுவாயில் வழியாக உள்ளே வரும். வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறக்காவல்நிலையம் பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியே செல்லும்.

அதேபோல் விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக செல்லும் வழியாக வெளியே செல்லும்.

பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், சென்னை பஸ்கள் வெளியே வரும்போது அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார்ரெட்டி உத்தரவிட்டார். அதன்படி இன்று திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சோதனை அடிப்படையில் பேருந்து நிலையத்திற்குள் வந்துசெல்லும் பாதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இந்த போக்குவரத்து மாற்றத்தின்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், தண்டராம்பட்டு, செங்கம் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் வழக்கமான பாதையில் உள்ளே வரும். வேலூர், வந்தவாசி, ஆரணி பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் புறக்காவல் நிலையம் அருகில் உள்ள நுழைவுவாயில் வழியாக உள்ளே வரும்.

பஸ்நிலையத்திற்குள் வரும் அனைத்து பேருந்துகளும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ள பாதை வழியாக வெளியே செல்லவேண்டும். வேலூர், ஆரணி பேருந்துகளும் இந்த வழியாக சென்று ரவுண்டானா சென்று திரும்பி வரவேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று நடைமுறை படுத்தப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்திற்குள்ளும், வெளியேயும் போக்குவரத்து பாதிப்பு குறைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த போக்குவரத்து மாற்றத்தினால் திருவண்ணாமலை நகரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதி மன்றம், மற்றும் வேலூர் ரோடு மார்க்கமாக செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு இன்றி இன்று காலை செல்ல முடிந்தது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா