டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் மரணம்

டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் மரணம்
X

மின்சாரம் பாய்ந்து பலியான மின்வாரிய ஊழியர்

திருவண்ணாமலை கீழ் நாச்சிபட்டு பைபாஸ் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பணியாற்றிய மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலியானார்

திருவண்ணாமலை கிழக்கு கிராமிய மின் பராமரிப்பு பணி புரிந்தவர் ரத்தினவேல். திருவண்ணாமலை கீழ் நாச்சிபட்டு கிராமத்தில் பைபாஸ் சாலையில் மின்தடை வழியில் உள்ள மரங்களை மின் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக அகற்றி வருகின்றனர் . இந்நிலையில் டிரான்ஸ்பார்மரை சுற்றி மரம் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன.

இந்தக் கொடிகளை அகற்றுவதற்காக மின் ஊழியர் ரத்தினவேல் மின்பாதையை ஆப் செய்து விட்டு டிரான்ஸ்பார்மரில் ஏறினார். ஆனால் டிரான்ஸ்பார்மரில் ஏற்கனவே இருந்த மின் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் உயிரிழந்தார் .

சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறை, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வந்து டிரான்ஸ்பார்மரில் இருந்த உடலை கீழே இறக்கினர். பணியின் போது உயிரிழந்த ஊழியரின் மரணத்தால் அப்பகுதியே சோகமானது.

இதுபற்றி திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!