திருவண்ணாமலை திமுக வேட்பாளர்: மீண்டும் அதே வேட்பாளர். இம்முறையும் வெற்றி வசப்படுமா?

திருவண்ணாமலை திமுக வேட்பாளர்: மீண்டும் அதே வேட்பாளர். இம்முறையும் வெற்றி வசப்படுமா?
X

சி.என். அண்ணாதுரை

Tiruvannamalai Dmk Candidate திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அண்ணாதுரை அறிவிப்பு

Tiruvannamalai Dmk Candidate

திருவண்ணாமலை திமுக வேட்பாளர்: மீண்டும் அதே வேட்பாளர்.. இம்முறையும் வெற்றி வசப்படுமா?.தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை 11 வது தொகுதியாகும்.அதன்படி திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்பி ஆன சி.என். அண்ணாதுரை போட்டியிடுகிறார்.திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவரான சி.என்.அண்ணாதுரை , பி.காம் படித்தவர். இவரது தந்தை பெயர் நடராஜன். ஒப்பந்தக்காரர் மற்றும் விவசாயம் இவரது தொழிலாகும். முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவரான அண்ணாதுரையின் மனைவி பல் மருத்துவர் ஆவார்.

அண்ணாதுரை ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்று, துரிஞ்சாபுரம் ஒன்றிய துணை தலைவராக இருந்தவர். தற்போது திமுகவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.கடந்த 1957ம் ஆண்டு இந்தத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த இரா.தர்மலிங்கம் வெற்றி பெற்றார். 1962 ம் ஆண்டு மீண்டும் தர்மலிங்கமும், 2009 ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த த.வேணுகோபாலும் இங்கு வெற்றி பெற்றனர். திமுகவின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த ஆர்.வனரோஜா வெற்றி பெற்று, திமுக வேட்பாளரான அண்ணாதுரையை இரண்டாம் இடத்திற்கு தள்ளினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அண்ணாதுரை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவிற்கு முதல் எம்.பி.யைத் தந்தது இந்தத் தொகுதி. தற்போது இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் திருவண்ணாமலையை திமுகவின் கோட்டையாக அண்ணாதுரை மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளராக சி என் அண்ணாதுரை அறிவித்ததைத் தொடர்ந்து மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர மன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future