பெண் தூக்கிட்டு தற்கொலை உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X
பெண் தூக்கிட்டு தற்கொலை உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே 4 மாத குழந்தையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை உள்ளிட்ட க்ரைம் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகில் உள்ள மலமஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவரது மனைவி சிவரஞ்சனி (26). இவர்கள் இருவருக்கும் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சதீஷ்குமார் வேலை விஷயமாக வெளியில் சென்று இருந்தார். மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிவரஞ்சனி வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் டி. எஸ். பி. ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சிவரஞ்சனிக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் மட்டுமே ஆவதால் சிவரஞ்சனியின் தற்கொலைக்கு காரணம் குறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மனைவி செல்வி. கணவர்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகன் சாமுவேல் (வயது 19) திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலாம் ஆண்டின் அனைத்து பாட தேர்வுகளுலும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-ம் ஆண்டு தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் இருந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!