திருவண்ணாமலை அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை பணம் திருடிய 4 பேர் கைது

திருவண்ணாமலை அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை பணம் திருடிய 4 பேர் கைது
X

திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த போலீசார்

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி வீட்டில் பூட்டை உடைத்து திருடிய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதை குபேர நகரை சேர்ந்தவர் முருகன். அ.தி.மு.க. நகர பொருளாளர். மேலும், திருவண்ணாமலையில் திருமண மண்டபம் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது மகளுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக, கடந்த 27ம் தேதி குடும்பத்தினருடன் விருதுநகருக்கு சென்றிருந்தார். பின்னர், கடந்த 28ம் தேதி இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவை, இரும்பு கம்பியால் நெம்பி உடைத்திருந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், ரூ 4 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளுக்கான ஹார்டு டிஸ்கையும் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் மேலும், டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், எஸ்ஐ நஸ்ருதீன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருடு போன வீட்டில் தடவியல் நிபுணர்கள் கைரேகையை சேகரித்தனர்.

அதனை தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருட்டு நடைபெற்ற வீட்டில் பதிவான கைரேகை, ஏற்கனவே குற்ற வழக்கில் பதிவாகி இருந்த வேங்கிக்கால் இந்திரா நகரை சேர்ந்த ரஞ்சித்தின் கைரேகையுடன் ஒத்துப்போவது தெரியவந்தது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில், இவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பலை நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை வேங்கிக்கால் இந்திரா நகரை சேர்ந்த சிவா மகன் ரஞ்சித் , அவரது நண்பர் திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த கவுரிசங்கர் மகன் ஸ்ரீராம் , ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டதும், இவர்களுக்கு உடந்தையாக ரஞ்சித்தின் தந்தை சிவா, தாய் அமுதா, ஆகியோர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

அதிமுக நிர்வாகி வீட்டில் திருடிய நகைகள் மற்றும் பணத்தை கொண்டு கோவை, கேரளா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றதும், அங்கிருந்து சென்னைக்கு வந்து பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், திருடிய 35 சவரன் நகையில் 15 சவரன் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தனர். எனவே, அவர்களிடமிருந்து 20 சவரன் நகை மீட்கப்பட்டது.

மேலும் திருடிய பணத்தை சுற்றுலா சென்றபோது செலவழித்தததாக தெரிவித்துள்ளனர். எனவே, அவற்றையும் மீட்பதற்கான நடவடிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....