துரிஞ்சாபுரம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி
துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம் கிழக்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஒன்றிங்களிலும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம் மற்றும் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் இரண்டு ஒன்றியங்களிலும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றுனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர்கள் ராமசாமி, சகாதேவன், ஆகியோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமஜெயம், அண்ணாமலை, ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு பேசியதாவது
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் திமுக கழக பவள விழா கழக ஆக்கப்பணிகள் என முப்பெரும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. என்பதாலும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி நமது திமுக வேட்பாளரை அபார வெற்றி பெறவைத்ததற்காகவும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக பல திட்டங்கள் வழங்கி வருகிறார் அதில் நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத்தொல்லை திட்டம் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் வழங்கி வருகிறார் இதன் மூலம் தமிழக மக்கள் வளர்ச்சியான பாதையில் சென்று வருகிறார்கள் என்றார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதியும் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்.
அதேபோல் உள்ளாட்சியிலும் தலைவர் கவுன்சிலர் ஒன்றிய குழு தலைவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என அனைத்து அங்கங்களையும் கைப்பற்றி திராவிட மாடல் நிலை நட்ட வேண்டும். ஏனென்றால் இப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போல் சட்டமன்றத் தேர்தலிலும் அபார வெற்றி பெறவேண்டும். அதற்கு வேறுகளாக உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் நீங்கள் தன் உறுதுணையாக இருந்து செயல்படவேண்டும். அப்படி செயல்பாட்டால் மட்டும்தான் நம் திராவிட மாடல் ஆட்சி அமைக்க முடியும்.
அதேபோல் மற்ற மாநிலங்களை விடதமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக மாறி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு அனைத்து துறைகளிலும் நிறைய இடங்களில் காலியாக உள்ளது அதனால் 75 ஆயிரம் பணியிடங்களை இந்த திராவிட மாடல் ஆட்சி முடிவதற்குள் அனைத்து பணிகளையும் நிரப்பப்படும். மேலும் கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கழக நிர்வாகிகளை அரவணைத்து செயல்பட வேண்டும் அப்படி செயல்பட்டால் மட்டும் தன் நாம் வெற்றி பெற முடியும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu