திருவண்ணாமலை: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு:

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் பழனி வரவேற்றார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர்கள் காளிமுத்து, ஏழுமலை, சுப்பிரமணியன், குணாநிதி, உத்திரகுமார் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்:

கண்ணமங்கலம் அருகே 100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் 100 நாள் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு வந்த அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் 100 நாள் திட்ட பணியாளர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை சரிவர வழங்கவில்லை என்று கூறினர்.

மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து அவ்வூர் வழியாக செல்லும் வேலூர் - ஆரணி மெயின்ரோடு மேட்டுக்குடி கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இனிவரும் காலங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக வாகனங்கள் அதே பகுதியில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்:

அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி, பாட்டாளி சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் உதயராகவ் வரவேற்றார்.

இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிய இந்து சமய அறநிலைத்துறையை வரவேற்கிறோம்.

மேலும் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் கட்டிடம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். திருவண்ணாமலை நகரில் நடைபெற்று வரும் அனைத்து சாலை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்கும் விடுதி கட்டி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் பா.ம.க. நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பா.ம.க. அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil