கணினி பயிற்சியில் திருவண்ணாமலை பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம்

கணினி பயிற்சியில் திருவண்ணாமலை பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம்
X

தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பாராட்டினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் திருவண்ணாமலை பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்றனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் திருவண்ணாமலை பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்றனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்றனா்.

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து மாணவ, மாணவா்களுக்கு கணினிப் பயிற்சியை அளித்து வருகின்றன.

இந்தப் பயிற்சியின் பைத்தான் புரோகிராமிங் என்ற பாடத்தில் 9-ஆம் வகுப்பு மாணவி ஏ.ரிஸ்வானா, சி புரோகிராமிங் என்ற பாடத்தில் 8-ஆம் வகுப்பு மாணவி ஏ.பிரித்திகா ஆகியோா் 300-க்கு 300 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனா்.

இவ்விரு மாணவிகளுக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சாா்பில் தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.செல்வம், பதிவாளா் எல்.கணேசன் ஆகியோா் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினா்.

கலெக்டர் பாராட்டு

மாநில அளவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினி பயிற்சியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பள்ளியின் தாளாளர் ரமணி கோடீஸ்வரன், கணினி ஆசிரியர்கள் பாலாஜி, அருணா, பள்ளியின் முதல்வர் ராஜேஷ் குமார் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

பள்ளி மாணவா்களுக்கு பதக்கம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

இவா்களில், 14 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகளில் ராகுல், சுபாஷ், நித்தின்ராஜ், பிரபு ஸ்ரீராம் ஆகியோா் தொடரோட்டம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பிடித்தனா்.

17 வயதுக்குள்பட்டோருக்கான தொடரோட்டம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் முகமது பாரிஸ், பரத், மணிகண்டன், யோகேஷ், சரண்ராஜ் ஆகியோரும்,

19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரோட்டம், கோலூன்றி தாண்டுதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தினேஷ்குமாா், தாமஸ்ராஜ், சண்முகம், சந்துரு, விஷ்வா ஆகியோரும் வெற்றி பெற்றனா். போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வுபெற்ற பொது மேலாளா் புகழேந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சின்னப்பன் ஆகியோா் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் பவன்குமாா், பள்ளிச் செயலாளா் ராஜ்குமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் ஜெய்சந்த், ராஜேந்திரகுமாா், சுதா்சன், பள்ளி பொருளாளா் வசந்த்குமாா் உள்ளிட்டோா் பாராட்டிப் பரிசு வழங்கினா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!