திருவண்ணாமலை நகராட்சி இன்று முதல் மாநகராட்சியாக உதயம்

திருவண்ணாமலை நகராட்சி இன்று முதல் மாநகராட்சியாக உதயம்
X

மாநகராட்சி உருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்ட மாநகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன்.

திருவண்ணாமலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தமிழ்நாட்டில் புதிததாக 4 மாநகராட்சிகள் இன்று உதயமாகி உள்ளன. திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார் .

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளும் 138 நகராட்சிகளும் 490 பேரூராட்சிகளும் அமைந்துள்ளன. இருப்பினும், அதிக மக்கள் வாழும் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கக் கோரி தொடர் கோரிக்கைகள் எழுந்து எழுந்து வந்தது

குறிப்பாக, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வந்தது.

இதையடுத்து, புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்தாண்டு, அறிவிப்பு வெளியிட்டார்.

திருவண்ணாமலை நகராட்சி, 18 ஊராட்சிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சியின் வாயிலாக 4 புதிய மாநகராட்சிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய நகராட்சிகள் அமைத்து உருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை அம் மாநகராட்சிகளில் தலைவர்களிடம் தமிழகம் முதல்வர் வழங்கினார். அந்த ஆணைகளை திருவண்ணாமலை மாநகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் துணைத் தலைவர் ராஜாங்கம் ஆகியோர் தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இதன்மூலம், மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்வு

திருவண்ணாமலை நகரம் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக உள்ளது

திருவண்ணாமலை 1866-ல் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பெற்றது. 1946-இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 1971-இல் முதல் நிலை நகராட்சியாக உருவானது.1998-இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2007-இல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

அதில் திருவண்ணாமலை நகராட்சியுடன் வேங்கிக்கால், அடி அண்ணாமலை, ஆடையூர், வேங்கிக்கால், நாச்சி பட்டு, மேலதிகான், நல்லவன் பாளையம், ஆணை பிறந்தான், ஏந்தல், சாவல் பூண்டி, வெங்காய வேலூர், இனம் காரியங்கள், அத்தியந்தல் போன்ற பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!