திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ரூ1.78 கோடி மதிப்பில் அதிநவீன கருவிகள்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த அதிநவீன கருவிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு உடனடியாக பயன்பாட்டிற்கு வந்தது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கருவிகளுடன் கூடிய 32 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த செவிலியர் கண்காணிப்பு மையம், நம்மியம்பட்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வாயிலாக 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் சாலைப்பாதுகாப்பு மாதிரி வழித்தடத்தில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 நிதியின் கீழ் ரூ.5 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்சுகளின் சேவைகளையும் முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி டீன் திருமால்பாபு, கண்காணிப்பாளர் ஷகில்அகமது, துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், பொதுப்பணித்துறை கட்டடங்கள் (மருத்துவப்பணி) செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் சுரேந்தர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், நகர மன்ற துணைத்தலைவர் ராஜாங்கம், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகள், ஒருங்கிணைந்த செவிலியர் கண்காணிப்பு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு டாக்டர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu