திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் பலரை ஃபெயில் ஆக்கி உள்ளது. நன்கு படிக்கக்கூடிய மாணவர்களும் இந்த தேர்வில் பெயில் ஆகியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த தேர்வு முடிவுகள் பலரை ஃபெயில் ஆக்கி, மேலும் தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர். எந்த வகையிலும் இல்லாமல் இந்த ஆண்டு மாதிரி தேர்வுகள் என சில தினங்களுக்கு முன் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை அனுப்பியது. மீண்டும் உண்மையான தேர்வு முடிவுகள் என நேற்று தேர்வு முடிவுகளை அறிவித்தது. இதுவரை இந்த நடைமுறை இல்லாத காரணத்தால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
முதல்முறை அறிவித்த தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் இரண்டாவது முறை அறிவிக்க தேர்வு முடிவுகளில் பெயிலாகி உள்ளனர். இது எவ்வாறு நடைபெற்றது என மாணவர்கள் கேள்வி எழுப்பினார்.
மேலும் பிஎஸ்சி இயற்பியல் பயிலும் மாணவர்கள் 250 பேரில் 150 மாணவர்கள் ஃபெயில் ஆக்கப்பட்டுள்ளனர். பலர் மதிப்பெண்கள் பூஜ்ஜியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் இன்டெர்னல் அசைன்மென்ட் என்று சொல்லப்படுகின்ற மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம்.
இன்டர்னல் அசைன்மென்ட் என்று சொல்லப்படுகின்ற மதிப்பெண்கள் கல்லூரியில் வழங்கப்படுவது.
கல்லூரியில் எந்த மாணவருக்கும் பூஜ்ஜியம் வழங்கப்படவில்லை. மேலும் அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது .ஆனால் தேர்வு முடிவுகளில் பல மாணவர்கள் பூஜ்ஜியம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இன்டர்னல் அசைன்மென்ட் என்று சொல்லப்படுகின்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வு எழுதும் போது பெற்ற மதிப்பெண்களை கூட்டி தான் தேர்வு முடிவுகள் வெளி வருகின்றன. அப்படி இருக்கும்போது அதிகம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பூஜ்ஜியம் என்று ரிசல்ட் வந்துள்ளது எப்படி என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த நான்கு செமஸ்டர்களில் 80 சதவீதத்திற்கு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த செமஸ்டரில் பெயிலாகி உள்ளார்கள் இது எப்படி?
மதிப்பெண்களை மறு கூட்டல் செய்வதற்கு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்க வேண்டுமானால் பணம் கட்ட வேண்டும், இப்படி அதிக மாணவர்களை ஃபெயில் ஆக்கினால் பல்கலைக்கழகத்திற்கு பணம் வரும் என பல்கலைக்கழகம் நினைக்கிறதா என மாணவர்கள் கோபத்துடன் கூறினார்கள்.
ஒரு தேர்வுக்கு இரண்டு ரிசல்ட் அனுப்புவது எந்த பல்கலைக்கழகத்திலும் நடைமுறை கிடையாது, அப்படி இருக்க ஒரே தேர்வுக்கு இரண்டு ரிசல்ட் அனுப்பி பல்கலைக்கழகம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி உள்ளதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரனிடம் மற்ற கல்லூரி பேராசிரியர்கள் கேட்டபோது அதற்கு அவரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு தலைவரும் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் கூறுகையில், மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடாமல் பல்கலைக்கழகம் முறையான முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து விரிவான அறிக்கை இன்று வெளியிடப்படுமா என மாணவர்கள், பேராசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu