திருவண்ணாமலை மாவட்டத்தில் 3வது நாளாக தொடர் மழை
சாத்தனூர் அணை
Heavy Rain News -திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 வது நாளாக இன்று அதிகாலை வரை விட்டு, விட்டு மிதமாக பெய்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை விட்டு , விட்டு மிதமாக பெய்து கொண்டிருந்தது.
இதனால் சாலையில் நடந்து சென்றவர்களும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் கையில் குடை பிடித்தப்படி சென்றதை காண முடிந்தது. தொடர் மழையின் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மேடு, பள்ளமான சாலையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகளவு ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி 128 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. 75-ல் இருந்து 100 சதவீதம் வரை 58 ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 79 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 312 ஏரிகளும் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 94 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. மீதமுள்ள 26 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படாமல் உள்ளது.
நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக வந்தவாசியில் 69.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- செய்யாறு-68, சேத்துப்பட்டு-46.8, ஆரணி-32, வெம்பாக்கம்-26, கீழ்பென்னாத்தூர்-18.6, கலசபாக்கம்-18, போளூர்-17.2, ஜமுனாமரத்தூர்-11, திருவண்ணாமலை-9.2, தண்டராம்பட்டு-8, செங்கம்-5.6 ஆகும்.
தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1915 கன அடி தண்ணீர் வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கி கல்வராயன் மலைத்தொடர் பகுதியிலும், கிருஷ்ணகிரி அணையின் உபரிநீரும் சேர்ந்து சாத்தனூர் அணைக்கு வரும் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகளவில் இருக்கும் என்பதால் அணையின் நீர்மட்டத்தின் முழு கொள்ளளவை விரைவில் எட்டிவிடும். இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதன்படி தற்பொழுது வலது இடது புற கால்வாய் வழியாக வினாடிக்கு 1800 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu