வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) கருணாநிதி வரவேற்றாா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் பேசுகையில்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பல லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.
இப்போது மக்களை தேடி முதல்வர் திட்டம் துவக்கப்பட்டு 30 நாட்களில் மனுக்கள் மீது தீர்வு காணப்படுகிறது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்று இருக்கிறார் என்றார்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டதுடன், நிவாரணத் தொகையாக குடும்பத்துக்கு ரூ.6ஆயிரம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, வெம்பாக்கம், துரிஞ்சாபுரம், சேத்துப்பட்டு, அனக்காவூா், வந்தவாசி, செய்யாறு, மேற்கு ஆரணி, போளூா், பெரணமல்லூா் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.ஒரு கோடியே 54 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இல. சரவணன், ஞானசௌந்தரி ,ஆறுமுகம் ,தெய்வமணி, அரவிந்தன், வெங்கடேசன் ,முருகேசன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு அலுவல உதவியாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் .
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu