தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டி: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அழைப்பு

தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டி:  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்  அழைப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ்

தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியத் தேர்தல் ஆணையம்,ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, "எனது வாக்கு - எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை'' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டியை தொடங்கியுள்ளது.

ஐந்து பிரிவுகளைக் கொண்ட இப்போட்டிக்கான விண்ணப்பங் கள் மார்ச் 15-ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மக்களின் ஏராளமான படைப்புகளை வரவேற்கிறது.

தேசிய அளவிலான போட்டியில், விநாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பரப் பட வடிவமைப்புப் போட்டி என ஐந்து பிரிவுகள் உள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை 'https://ecisveep.nic.in/contest/' என்ற இணையதளத்தில் காணலாம். போட்டிகள் தொடர்பான பதிவுகள் விவரங்களை, 'voter-contest@eci.gov.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விநாடி- வினா போட்டியில் பங்கேற்க விரும்புவோர் போட்டிக்கான வலை தளத்தில் பதிவு செய்யலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

Tags

Next Story