திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் திருவிழா
X

பைல் படம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் திருவிழா நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கோவில் தல வரலாறுபடி, பிருங்கி முனிவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அண்ணாமலையாரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது, வண்டு உருவில் அண்ணாமலையாரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார்.

அதனால் அண்ணாமலையாருக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மனித வாழ்வில் கணவன்- மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு, பிறகு கூடல் ஏற்படுவதும் வாழ்வின் ஒரு நிலை என்பதை பக்தர்களுக்கு விளக்குவதும் திருவூடலாகும். திருவூடல் திருவிழா இன்று நடக்கிறது.

இன்று திருவூடல் திருவிழா நடைபெறுவதை பற்றி மாவட்ட நிர்வாகமும் அண்ணாமலையார் கோவில் நிர்வாகமும் எத்தகைய அறிவிப்பும் வெளியிடாத நிலையில் இன்று காலை திருவிழா தொடங்கியது. அண்ணாமலையார் மாடவீதியில் எழுந்தருளியுள்ளார்.

இது பற்றி அண்ணாமலையார் கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது இந்தத் திருவிழா ஒரு முக்கியமான திருவிழாவாகும் எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் மாவட்ட நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை இன்று விதித்துள்ளது. அண்ணாமலையார் கிரிவலம் நாளை நடைபெறுமா அல்லது இன்றே நடைபெறுமா என்று இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லை

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா