/* */

ஆன்மீகமும் திராவிடமும் கலந்து பயணிக்கிற ஊர் திருவண்ணாமலை: அமைச்சர் பேச்சு

ஆன்மீகமும் திராவிடமும் கலந்து பயணிக்கிற ஊர் திருவண்ணாமலை என்று அமைச்சர் வேலு பேசினார்.

HIGHLIGHTS

ஆன்மீகமும் திராவிடமும் கலந்து பயணிக்கிற ஊர் திருவண்ணாமலை: அமைச்சர் பேச்சு
X

முதலமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசிபாடி பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், திரு என்று சொன்னால் திராவிடம், அருள் என்று சொன்னால் ஆன்மீகம், கிரி என்று சொன்னால் மலை திருவண்ணாமலை நகரில் தான் ஆன்மீகமும் திராவிடமும் இரண்டற கலந்து பயணிக்கிற ஊர்.நமது ஊருக்கு வந்த நம் முதல்வர் இன்று காலையிலேயே ஓய்வெடுத்து இருக்கலாம் ஆனால் ஊர் மக்களை பார்க்க வேண்டும் என்பதற்காக காலையில் ஒரு மணி நேரம் நமது ஊர் மக்களுடன் உற்சாகமாக பயணித்தார்கள்.

காலையில் நடைபயிற்சியின் பொழுது பள்ளி குழந்தைகள் விவசாயிகள் வியாபாரிகள் ஆன்மீகப் பெருமக்கள் சிவனடியார்கள் உள்ளிட்டோ ஆர்வமாக வந்து முதலமைச்சரிடம் செல்பி எடுத்துக் கொண்டதை சுட்டிக்காட்டி பேசினார்.

ஆன்மீகமும் திராவிடமும் இணைந்து திராவிடம் ஆடல் ஆட்சி செய்கிறவர் நமது முதலமைச்சர் ஸ்டாலின்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தமிழகத்தில் உள்ள தொகுதிகளிலேயே முதலமைச்சரின் மனதில் நிற்கும் வகையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து தீப ஒளி தரும் திருவண்ணாமலைக்கு நூற்றாண்டு கண்ட திருவண்ணாமலை நகராட்சிக்கு மாநகராட்சி ஆக தரம் உயர்த்தி தந்தவர் நமது முதலமைச்சர் என அமைச்சர் வேலு புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை பேசியதாவது: முதலமைச்சர் தொடர்ந்து மூன்று முறை மாவட்ட இளைஞரணி தலைவராகவும் மூன்று முறை இந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார்கள், எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை வரப்பிரசாதமாக எண்ணுவதாகவும் இந்த தொகுதி மக்களுக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தரணி வேந்தன் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் செஞ்சு மஸ்தான், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட துணைச் செயலாளர் பிரியா விஜய் ரங்கன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் நேரு ,ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் ,தொண்டர்கள் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2024 2:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...