காணொளியில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்

காணொளியில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

காணொளி வாயிலாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை 27ம் தேதி நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளாார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாதம்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த முடியாத நிலை உள்ளது. ஆனாலும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தீர்க்கவும் இணையவழி காணொலி காட்சி மூலம் குறைதீர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 27ம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் காணொலி காட்சி மூலம் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். இதில் வேளாண்மை துறை, வருவாய் துறை, கூட்டுறவுத் துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

இணைய தள வசதி இல்லாத விவசாயிகள் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை அலுவலகம், மற்றும் வட்டார வளர்ச்சி, அலுவலகங்களில் இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களுடைய பொது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைய வசதியை பயன்படுத்தி தெரிவிக்கலாம் இவ்வாறு ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture