வாக்காளர், வாக்குச்சாவடி இறுதிப்பட்டியல் வெளியீடு

வாக்காளர், வாக்குச்சாவடி இறுதிப்பட்டியல் வெளியீடு

வாக்காளர் வாக்குச்சாவடிகளின் இறுதி பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் வாக்காளர் மற்றும் வாக்குச்சாவடி இறுதி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

திருவண்ணாமலை மாவட்டத்தின் வாக்காளா் இறுதிப் பட்டியல், வாக்குச் சாவடிகளின் இறுதிப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு 2024-ல் வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலை வழங்கினாா்.

இத்துடன், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் சட்டப்பேரவை வாரியாக இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்த பட்டியலையும் அவா் வழங்கினாா்.

20.90 லட்சம் வாக்காளா்கள்

மாவட்டத்தில் இறுதியாக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 10 லட்சத்து 23 ஆயிரத்து 542 ஆண் வாக்காளா்கள், 10 லட்சத்து 67 ஆயிரத்து 206 பெண் வாக்காளா்கள், 125 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 20 லட்சத்து 90 ஆயிரத்து 873 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். திருவண்ணாமலை தொகுதியில் 1,719 வாக்குச்சாவடிகள்...

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 1,719 வாக்குச் சாவடிகளும், 3 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 267 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூா் - 267 வாக்குச் சாவடிகள், செங்கம் - 323 வாக்குச்சாவடிகள், திருவண்ணாமலை - 296 வாக்குச்சாவடிகள், கீழ்பென்னாத்தூா் - 285 வாக்குச்சாவடிகள், கலசப்பாக்கம் தொகுதியில் 281 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 3 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆரணி மக்களவைத் தொகுதியில்..

ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 1,758 வாக்குச்சாவடிகளும், 2 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள், ஆரணி - 311 வாக்குச் சாவடிகள், செய்யாறு - 311 வாக்குச்சாவடிகள், வந்தவாசி - 280 வாக்குச்சாவடிகள், செஞ்சி - 304 வாக்குச்சாவடிகள், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் 267 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, வந்தவாசி தொகுதியில் 2 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாக்காளா் இறுதிப் பட்டியல், வாக்குச்சாவடிகளின் விவரம், வீட்டில் இருந்தே வாக்களிக்க விரும்பும் வாக்காளா்களின் பட்டியல் ஆகிய அனைத்தும் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களிடமும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடமும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தேர்தல்) குமரன், அஞ்சல் வாக்குச்சீட்டு பொறுப்பு அலுவலா் சரண்யாதேவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மூத்த வாக்காளா்கள் 31,690 பேர்..

வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி , திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 31 ஆயிரத்து 690 பேர் உள்ளனா். இவா்களில் 3 ஆயிரத்து 844 பேர் தபால் மூலம் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா். இது 12.1 சதவீதம் ஆகும். மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 35,544 பேர்... இரு மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 35 ஆயிரத்து 544 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்னா். இவா்களில் 3 ஆயிரத்து 699 பேர் தபால் வாக்குகள் மூலம் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா் . இது 10.4 சதவீதம் ஆகும்.

Next Story