கல்விதான் செல்வம், அதை வழங்க கூடியவர்கள் ஆசிரியர்கள்; ஆட்சியர் அறிவுறுத்தல்
ஆசிரியர் தின விழாவில் ஆசிரியைகளை பாராட்டி விருதுகளை வழங்கிய ஆட்சியர்
கல்விதான் செல்வம் அதை வழங்க கூடியவர்கள் ஆசிரியர்கள் , நாடு முன்னேற கண்டுபிடிப்புகள் அவசியம் என ஆசிரியர் தின விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் திலகம் ராஜாமணி, பள்ளி துணை ஆய்வாளர்கள் செந்தில்குமார், பாபு ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஸ்கரபாண்டியன் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் கணிதப்பட்டதாரி ஆசிரியர் எஸ்.லட்சுமியின் பெருமுயற்சியால் 10ம்வகுப்பு தேர்வில் 36 மாணவிகள் 100க்கு 100 தேர்ச்சி பெற்றதை பாராட்டியும், பள்ளியின் சராசரி 96 சதவித மதிப்பெண் பெற காரணமாக இருந்த அவரை சால்வை அணிவித்து பாராட்டியதோடு ஆசிரியர் தினவிழாவையொட்டி பள்ளியில் பணியாற்றும் 14ஆசிரியைகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவித்து மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றுகையில்
எனது தாயார் தலைமை ஆசிரியர் தாத்தா ஆசிரியர். இப்படி எங்கள் தலைமுறை ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். கல்வி மனதைபக்குவப்படுத்துகிறது, வாழ்க்கையை உயர்த்திக் காட்டுகி ற து . நாடு முன்னேற கண்டுபிடிப்புகள் அவசியம் அப்போதுதான் பொருளாதார ரீதியாகவும், வலிமையானதாகவும், நாடு மு ன்னே று ம் . கல்விதான் செல்வம் அதை வழங்க கூடியவர்கள் ஆசிரியர் பெருமக்கள்.
ஆசிரியர்களின் தியாகம் தன்னலமற்ற சேவையை இந்நாளில் கொண்டாடி மகிழ்கிறோம். இந்தப் பருவத்தில் கல்வியை தவறவிட்டால் அதன் பிறகு கற்க முடியாது. வாழ்க்கையை மாற்றும் இடம்பள்ளிக்கூடம். நமது மாவட்டம் கல்வியில் பின்தங்கி இருப்பதற்கு காரணம் குழந்தை திருமணம் தான். குழந்தை திருமணம் எங்கு நடந்தாலும் 1098 என்ற எண்ணுக்கு போன் செய்து தகவல்தெரிவிக்கலாம் அவர் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும். பள்ளிகளுக்கும் மாணவ மாணவிகளுக்கும் ஏதாவது உதவி தேவை என்றால் என்னிடம் சொல்ல சொல்லி அதிகாரியிடம் கூறியிருக்கிறேன். இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
விழாவில் பெற்றோர் கழக சங்க உறுப்பினர் வித்யாலட்சுமி ஆசிரியர்கள் என்.ஜெ கதா, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினை பட்டதாரி ஆசிரியர் சித்ரா தொகுத்து வழங்கினர். முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை மலர்விழி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu