குறை தீர் கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு அரசு அதிகாரிகளே மனுக்கள் எழுதி தர வேண்டும் ஆட்சியர் உத்தரவு
பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்களை எழுதி தந்த அரசு ஊழியர்கள் அதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
மக்கள் குறை தீர்வு நாளுக்கு அரசு துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், போளூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்க குவிந்தனர்.
இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் ஏழை எளிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியாக அமர்ந்து மனுக்கள் எழுதுபவர்களிடம் பணம் கொடுத்து தங்களது குறைகளை மனுவாக எழுதி வருகின்றனர். மனுக்கள் எழுதிக் கொடுப்பதற்காகவே நிறைய பேர் அங்கு அமர்ந்திருப்பார்கள்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டத்தில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் . அந்த மனுவை வாங்கி பார்த்த மாவட்ட ஆட்சியர் இந்த மனு உங்களுக்கு தவறுதலாக எழுதிக் கொடுத்தது யார் என்று கேட்டார். அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெளிநபர்கள் மூலம் மனு எழுதி வந்ததாக அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.இந்த மனுவை எழுதுவதற்கு எவ்வளவு பணம் தந்தீர்கள் என்று கேட்டதற்கு அந்த பெண் ரூபாய் 50 கொடுத்து மனு எழுதி வந்ததாகவும் தெரிவித்தார்
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரை அழைத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எத்தனை துறை உள்ளதோ அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தலா இரண்டு நபர்கள் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று அமர்ந்து மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி தர வேண்டும் என கூறினார்.
அது மட்டும் இன்றி கடந்த பல ஆண்டுகளாக மனு அளிக்க வரும்போது மக்கள் நீண்ட நேரமாக கால் தடுக்க நின்றிருந்த நிலையில். நேற்று 500 நாற்காலிகளை வரவழைத்து பொதுமக்களை அமர வைத்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu