/* */

தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி

தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 -ம் நாளினை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என தெரிவித்து அரசாணை அறிவிக்கப்பட்டது.

அதற்கு இணங்க தமிழ்நாடு நாளினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6- ம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் தியாகி அண்ணாமலை மேல்நிலைப் பள்ளியில் 5 ம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது.

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூபாய் 10,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 7000 மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்படும்.

போட்டிக்கான தலைப்புகள்

1. தமிழ்நாடு உருவான வரலாறு

2. மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும்,

3. தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்

4. பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு

5. சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம்

6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார்

7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா. பொ. சி.

8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு

9. எல்லைப் போர் தியாகிகள்

10. முத்தமிழ் அறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பயிலும் மாணவ மாணவிகள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 July 2022 4:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!