தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அறிவிப்பு ( கோப்பு படம்)
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெ ரு மைப்ப டு த் தி , ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச் செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 25,000 பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www. tamilvalarchithurai.tn.gov. in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு , நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்பு சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை நகலுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 09.08.2024-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu