வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு: ஆட்சியர் தகவல்

வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலையில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி கொண்டிருக்கிறது.தமிழக அரசு இத்திட்டத்தின் கீழ் வியாபார தொழிலுக்கு திட்ட முதலீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், வியாபார தொழிலுக்கு மானியத் தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொது பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயதில் இருந்து 55 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வித்தகுதி நீக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதி வாய்ந்த நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து இரு நகல்களுடன் மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, விலைப்புள்ளி மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம், திருவண்ணாமலை அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். என மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future