அரசு பள்ளியில் தேனீக்கள் கொட்டி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் காயம்
பள்ளி வராண்டாவில் உள்ள தேன்கூடு.
திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். அங்குள்ள புதிய கட்டிடத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது.
இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை தேனீக்கள் கொட்டியது. இதில் மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். தேனீக்கள் விரட்டி சென்று அவர்களை கொட்டியது. இதில் 31 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 5 ஆசிரியர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..
மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேன் கூடு கட்டுவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே 3 முறை தேன்கூடு தீயணைப்புத் துறையினர் மூலம் அழிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு செயல்பட்டுவரும் பள்ளியின் மூன்றாவது மாடியில் நான்காவது முறையாக தேன் கூடு கட்டியுள்ளது, மொத்தம் இரண்டு தேன் கூடுகளை தேனீக்கள் கட்டியுள்ளன.
இவற்றை அழிக்க பள்ளி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாணவர்கள் பள்ளிக்கு வராத கோடை விடுமுறையின் போது அல்லது சனி ஞாயிறு விடுமுறை நாட்களிலோ தேன்கூட்டை அகற்றாமல் பள்ளி நிர்வாகம் விட்டு விட்டது என்று குற்றம் சாட்டியுள்ள பெற்றோர்கள் அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu