ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை: 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (50 சதவீதம் அரசு இடஒதுக்கீட்டின் படி) இணையதளம் வாயிலாக சேர்க்கை நடைபெறவுள்ளது. வருகிற 7-ம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாகும்.
மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வருகிற 10-ந்தேதி வெளியிடப்படும். விண்ணப்பத்தின் போது முன்னுரிமை விருப்பங்களுக்கேற்ப தெரிவு செய்த தொழிற்பயிற்சி நிலையங்களின் அடிப்படையில் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டுள்ள விவரங்களை தெரிவித்து விண்ணப்பதாரர்களுக்கு 14-ம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும். அன்று தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்போர் திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செய்யாறு அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஜமுனாமரத்தூர் அரசு தொழற் பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு சென்று சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையெழுத்து, இணையதள முகவரி, செல்போன் எண் ஆகியவை .
விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியாக செலுத்த வேண்டும். உதவி மையத்திற்கு வருகைபுரியும் மாணவர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu