திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில்

சிறப்பு ரயில் கால அட்டவணை
Tiruvannamalai To Rameswaram Bus-காட்பாடி-விழுப்புரம் பாதையில் செகந்தராபாத் - ராமேஸ்வரம் முன்பதிவு பெற்ற வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் வரை இயக்கப்படும். அதற்கான கால அட்டவணை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
ஆன்மீக நகரங்களான ராமேஸ்வரம், கும்பகோணம், திருவண்ணாமலை, திருப்பதி, ஆகிய பகுதிகளை இணைத்து ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம், திருவண்ணாமலை,காட்பாடியில் நின்று செல்லும்.
செவ்வாய்கிழமைகளில் செகந்தராபாத்திலும், வியாழக்கிழமைகளில் ராமேஸ்வரத்திலும் ரயில் கிளம்பும். திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி மற்றும் ராமேஸ்வரம் செல்வதற்கும், அடுத்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா வரும் நிலையில் இந்த சிறப்பு ரயில் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu