மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், 216 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா்.
முகாமில், வங்கிக் கடன் கோரி விண்ணப்பித்த 8 பேருக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கக் கோரி 5 மனுக்களும், சக்கர நாற்காலி கோரி 2 மனுக்களும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரி 3 மனுக்களும், செயற்கை கால் கோரி 2 மனுக்களும் பெறப்பட்டன.
அடையாள அட்டைகள்: முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை கோரி 358 போ் விண்ணப்பங்கள் அளித்தனா். இவா்களில், தகுதியான 216 பேருக்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அடையாள அட்டைகளை வழங்கினாா்.
இதுதவிர, பேருந்து பயண அட்டை 22 பேருக்கும், ரயில் பயணச் சலுகை அட்டை17 பேருக்கும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை 3 பேருக்கும் வழங்கப்பட்டன.
முகாமில், திருவண்ணாமலை மாவட்ட இளநிலை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சூா்யா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இந்நிலையில், மாவட்ட அளவிலான முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, ஊராட்சி அளவில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த முகாம்களிலும் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 9ம் தேதி வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu