தொழில் முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டம்
பைல் படம்
பழங்குடியின தொழில் முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள தகவல்: அண்ணல் அம்பேத்கர் 'பிசினஸ் சாம்பியன்ஸ்' திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கிக் கடனாகவும் 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம்.
அதிகபட்சமாக ரூ 1.50 கோடி வரை மானியமாக பெறலாம். வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் தொடங்க விரும்புவோரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற கல்வித் தகுதி இல்லை. 55 வயதுக்குட்பட்டோர், உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் தொடங்கலாம். வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்படக்கூடிய தொழில் மற்றும் உற்பத்தித் தொழில்கள் தொடங்குவோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். சுய முதலீட்டில் தொழில் துவங்கினாலும் இத்திட்டம் மூலம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம் பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu