முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு நாளை சிறப்பு முகாம்

முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு நாளை  சிறப்பு முகாம்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெறுவதற்கு உண்டான வழிமுறைகள் நகரம் மற்றும் கிராம மக்களுக்கும் சென்றடையும் வகையில் திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவின்பேரில் நாளை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி செய்யாறு தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதியில் தாசில்தார் திருவண்ணாமலை அவர்கள் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

மேலும் வந்தவாசி வட்டம் ஓசூர் உள்வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஓசூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு தாசில்தார் தலைமையில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் ஏழை எளிய மக்கள் கலந்துகொண்டு விண்ணப்பித்து பயன் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்