திருவண்ணாமலையில் வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
X
வருகிற 12 ந்தேதி முதல் வியாழக்கிழமை தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என திருவண்ணாமலை கலெக்டர் தகவல்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் கோரிக்கையின் பேரில் வருகிற 12-ந்தேதியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முகாமில் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை புதிதாக பெறுதல் அல்லது புதுப்பித்துக்கொள்ள நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதைத் தொடர்ந்து மருத்துவ முகாமில் பங்கேற்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய சான்றுகளுடன் நேரில் வர வேண்டும். இந்தச் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்றைய தினமே புதிய அட்டை மற்றும் பழைய அட்டை புதுப்பித்து வழங்கப்படும். மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!