திருவோண நட்சத்திரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவோண நட்சத்திரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
X
சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம்,, அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை: சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவரூபமான நடராஜருக்கு, ஆண்டுக்கு, மூன்று நட்சத்திரம் மற்றும் மூன்று திதிகள் என, ஆறு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். நடராஜருக்கு, சித்திரை மாதம் திருவோணம், ஆனி மாதம் உத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும், மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி நாளில் சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில், நடராஜர் சன்னதியில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future