அருணை மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் (வயது 70) என்பவருக்கு அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இது குறித்து டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ''பெரும்பாலான மக்கள் முழங்கால் மூட்டு தேய்மான நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே தீர்வாக உள்ளது. இந்த நோயை ஆரம்ப நிலையிேலயே கண்டறிந்தால் முழங்கால் மூட்டின் ஒரு பகுதியை மட்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இந்த சிகிச்சை மேற்கொண்டவர்களால் வலியில்லாமல் நடக்க முடியும். ஆனால் இயல்பாக கால்களை மடக்கி உட்கார இயலாது. ஆனால் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு தசையை மட்டும் அகற்றி விட்டு செயற்கை மூட்டு பொருத்தப்படும். இதனால் மற்ற தசை நார்கள் பாதுகாக்கப்படும். இவர்கள் ஒரு மாதத்தில் தங்களின் வழக்கமான பணிகளை செய்யலாம்'' என்றார்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக்குழுவினரை மருத்துவக்கல்லூாி துணைத் தலைவர் எ.வ.குமரன், இயக்குனர் எ.வ.வே.கம்பன், மருத்துவக்கல்லூரி இணை இயக்குனர் டாக்டர் முகமது சயீ, கல்லூரி முதல்வர் டாக்டர் குணசிங், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் குப்புராஜ், நிர்வாக அலுவலர் முனைவர் டிவி எஸ்ஆர். சேஷாத்திரி உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu