திருவண்ணாமலை; மினி லாரியில் எரி சாராயம் கடத்தல்; இருவர் கைது

திருவண்ணாமலை; மினி லாரியில் எரி சாராயம் கடத்தல்; இருவர் கைது

மினி லாரியில் எரி சாராயம் கடத்தல்; இருவர் கைது (கோப்பு படம்)

திருவண்ணாமலையில் மினி லாரியில் எரி சாராயம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் விற்பனைக்காக மினி லாரியில் எரி சாராயம் கடத்தி வந்த இரண்டு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எரி சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் நேற்று இரவு திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பைபாஸ் சாலைகள் என பல பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

அப்போது நடைபெற்ற சோதனையில் மினி லாரியின் உள்ளே 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்கள் இருந்தன. அந்த கேன்களை திறந்து பார்த்தபோது அதில் எரி சாராயம் இருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் மினி லாரியில் எரி சாராயத்தை கடத்தி வந்த கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா கெங்காநந்தல் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் செங்கம் தாலுக்கா பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 15 கேன்களில் கொண்டுவரப்பட்ட எரி சாராயத்தை பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் எரி சாராயத்தை விற்பனைக்காக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா பகுதியில் குமார் என்பவரிடமிருந்து வாங்கி வந்ததாகவும் வரும் வழியில் திருவண்ணாமலை நாவக்கரையில் சண்முகம் என்பவருக்கு ஐந்து கேன் எரி சாராயம் இறக்கி விட்டு வந்ததாகவும் தெரிவித்தனர் இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் மற்றும் சண்முகத்தை தேடி வருகின்றனர்.

Next Story