திருவண்ணாமலையில் குறும்படம் பாராட்டு விழா!

திருவண்ணாமலையில் குறும்படம் பாராட்டு விழா!
X

சிறந்த குறும்பட தயாரிப்பாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஆறுமுகம்

திருவண்ணாமலையில் சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது

திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நல சங்கம் சார்பில் குறும்படம் பாராட்டு விழா நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்க மாவட்ட தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிவ தாமோதரன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் குறும்பட தேர்வு குழுவின் நடுவர்களாக நாட்டுப்புற தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்க மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், திரைப்பட இயக்குனர்கள் செல்வராஜ் ,ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த விழாவில் 30க்கும் மேற்பட்ட குறும்படங்கள் தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்தன.

அதில் காதல் குறும்படம் ,தொப்புள் கொடி, முகவரி இல்லாத கடிதம் என மூன்று குறும்படங்கள் முதல் மூன்று பரிசுகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த மூன்று குறும்படங்களும் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் நண்பர்கள் குழு தலைவரும் தூய்மை அருணை துணை அமைப்பாளருமான ஆறுமுகம், திரைப்படத் தயாரிப்பாளர் ராஜா மற்றும் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த குறும்படங்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10000 , இரண்டாம் பரிசாக ரூபாய் 5௦௦௦, மூன்றாம் பரிசாக ரூபாய் 3000 ரொக்க பணம் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், துணை செயலாளர் கருணாகரன், திரைப்பட நடிகர்கள் ரஜினி, மருது, செல்லங்குப்பம் விஜயன் ,கௌரி அம்மாள் ,மகளிர் அணி தலைவி அஸ்வினி ஆகியோர் செய்திருந்தனர்.

இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறும்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!